தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சன்
வேலுசாமி (Author) Published Date : Mar 13, 2018 14:28 ISTபொழுதுபோக்கு
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் (75) தற்போது தக்ஸ் ஆப் இந்தோஸ்தான், 102 நாட் அவுட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் இயக்குனர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அமீர் கான், கத்ரினா கைப் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஓய்வின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும், இரவிலும் தூங்காமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக தற்போது அமிதாப் பச்சனுக்கு ஜெய்ப்பூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பல்வேறு துறையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் ஜெய்ப்பூருக்கு விரைந்துள்ளனர்.
இதற்கு முன்பாகவும் அமிதாப் பச்சன் மும்பையில் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்.