Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் அருண் விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் அருண் விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடிப்பில் தடம் மற்றும் சாஹு போன்ற படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'தடம்' படத்தின் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் வெளியீடு தேதியினை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

இதன் பிறகு நடிகர் பிரபாஸுடன் இணைந்து 'சாஹு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர 'தளபதி 63' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண் விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி இந்த படத்திற்கு 'பாக்ஸர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் விவேக் எழுதி இயக்குகிறார்.

எட்சட்ரா என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் தயாரிக்க உள்ளார். குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்திற்கு லியோன் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் அருண் விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு