Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் அருண்விஜயின் 'தடம்' படத்தின் புதிய தகவல்

thadam movie melody song

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது 'தடம்' என்ற அதிரடி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரேதன் தி சினிமா பீப்புள் சார்பில் இந்தேர் குமார் தயாரிக்கிறார்.

 'குற்றம் 23' என்ற வெற்றி படத்தினை தொடர்ந்து அருண்விஜய் நடிக்கிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் போன்றவை விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அருண் ராஜ் இசையமைப்பில் பாடகர் சித் ஸ்ரீராம் ஒரு மெலோடி பாடலை நேற்று பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பாடல் அனைவரையும் கவரும் வகையில் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக அருண்விஜய் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண்விஜயின் 'தடம்' படத்தின் புதிய தகவல்