Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

புதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு

நடிகர் மற்றும் இயக்குனருமான கின்னஸ் பக்ரு தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முன்னதாக கின்னஸ் சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு தற்போது மேலும் புதிய சாதனை படைத்தது மூன்று கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுள்ளார். கின்னஸ் பக்ரு என்கிற அஜய் குமார் இவருக்கு வயது 41. இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் 1985முதல் தற்போது வரை 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் 2 அடி 6இன்ச் உயரம் மட்டுமே கொண்ட குள்ள மனிதராவார்.

இவருக்கு முன்னதாக திரைத்துறையின் சிறிய உயரம் கொண்ட நடிகர் மற்றும் சிறிய உயரம் கொண்ட இயக்குனர் என்ற கின்னஸ் சாதனைகள் கிடைத்தது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் கடந்த 2013இல் மலையாளத்தில் வெளியான 'குட்டீம் கொளும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவருடைய நடிப்பில் இறுதியாக புண்யலன் பிரைவேட் லிமிடேட் என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில் தற்போது இவருடைய பெயர் யுனிவர்சல் ரெகார்டஸ் (Universal Records Forum), லிம்கா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் (Limca Book of Records) மற்றும் பெஸ்ட் ஆப் இந்திய ரெகார்ட்ஸ் (Best of India Records book) போன்ற கின்னஸ் புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு காயத்ரி மோகன் என்ற மனைவியும் தீப்தா கீர்த்தி என்ற ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவருடைய மகளான தீப்தா கீர்த்தி திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார். 

புதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு