டெல்டா விவசாயிகளை காப்பாற்ற நடிகர் ஜிவி பிரகாஷின் ஆலோசனை
வேலுசாமி (Author) Published Date : Nov 22, 2018 19:06 ISTபொழுதுபோக்கு
கடந்த சில தினங்களாக 'கஜா' என்ற வார்த்தையால் ஒட்டு மொத்த தமிழகமும் பீதியில் ஆழ்ந்துள்ளது. அந்த அளவிற்கு கஜா புயலின் தாக்கம் தமிழகத்தை பெருமளவு தாக்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடலோர பகுதிகளை சேர்ந்த டெல்டா பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த கஜா புயலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உதவிட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை அளித்து வருகின்றனர்.
ஆனாலும் தொடர்ந்து ஓயாமல் கஜா புயலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் ஏராளமான இடங்களில் மக்களுக்கு போதிய அடிப்படை உதவி கிடைக்காமலே உள்ளது. கரண்ட் இல்லமால், இருக்க வீடு கூட இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். கஜா புயலினால் டெல்டா பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதனை வாய்ப்பாக கருதி சில புண்ணியவான்கள், வீழ்ந்த தென்னை மரத்தின் தேங்காய்களை குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலமும் மனிதாபிமானமே இல்லாமல் பணம் சம்பாதித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிட நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் முன்வந்துள்ளார். பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளை காண சென்ற அவர், பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். வீழ்ந்த தேங்காய்களுக்கு, விவசாயிகளுக்கு உதவ கூடிய வகையில் ஒரு விலையை நிர்ணயம் செய்து வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான மொபைல் எண்ணையும் பதிவு செய்துள்ளார்.