முதலமைச்சரை சந்தித்து ஜி.வி.பிரகாஷ் நன்றி
வேலுசாமி (Author) Published Date : Nov 02, 2017 17:24 ISTபொழுதுபோக்கு
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கைக்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய இருக்கிறது. இதற்காக பல தரப்பினரிடையே ஆதரவும் பாராட்டுகளும் தெரிவித்துவருகின்றனர். இளம் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இதற்காக தனது பாராட்டுகளை டிவிட்டரில் தெரிவித்தார். இதனை அடுத்து திரைப்பட சங்க தலைவரான விஷால் தனது பங்காக 10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கன்னடத்தில் இசைநிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வசூலான தொகையிலிருந்து தனது பங்காக 16 லட்சம் நிதிஉதவி வழங்கினார். மேலும் தமிழக அரசு ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு 10 கோடி வழகியுள்ளது. தமிழ் இருக்கைக்கு 40 கோடி தேவைப்படும் நிலையில் மத்திய அரசும் உதவ முன்வரவேண்டும் என விஷால் வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசு அளித்த 10 கோடி நிதியுதவிக்கு முதலமைச்சரை நேரில் சென்று தனது நன்றியை தெரிவித்தார். நானும் நிதியுதவி திரட்ட இசைநிகழ்ச்சி நடத்துவேன் என்றும் மத்திய அரசும் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.