Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

11 வருடங்களுக்கு பிறகு அஜித் ரசிகராக என்ட்ரி கொடுக்கும் அம்சவர்தன்

பழம்பெரும் நடிகரான அம்சவர்தன் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

'புன்னைகை தேசம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகரான அம்சவர்தன், 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'பிறகு'. 1999இல் அறிமுகமான இவர் இதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் 2007க்கு பிறகு தனது தந்தையின் தொழிலை கவனிக்க சென்று விட்டார்.

ஒரு நடிகராக இருந்து தற்போது பிசினஸ் மேனாக வளர்ந்து 11 வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இவருடைய அடுத்த படத்தினை இயக்குனர் விஜய் ஸ்ரீஜி என்பவர் இயக்குகிறார். இவர் ஷாருக் ஹாசனின் 'தாதா 87' படத்தை இயக்கியவர். இவருடைய இயக்கத்தில் நடிகர் அம்சவர்தன் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த படத்தினை AFF நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வரும் அக்டோபர் 18இல் சரஸ்வதி பூஜை அன்று வெளியிட உள்ளனர். இந்த படத்தில் நடிகர் அம்சவர்தன் தல அஜித் ரசிகராகவும், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

11 வருடங்களுக்கு பிறகு அஜித் ரசிகராக என்ட்ரி கொடுக்கும் அம்சவர்தன்