Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'ஜருகண்டி' நடிகர் ஜெய்யின் புதுப்பட தலைப்பு

jarugandi new movie poster

இயக்குனர் சித்திஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பலூன்'. இந்த படத்தை 70எம்எம் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளேன் ப்ரொடக்சன் சார்பில் திலிப் சுப்பராயன், அருண் பாலாஜி, நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 29-இல் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'பார்ட்டி' படத்திலும், சுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 2' படத்திலும் நடித்து வருகிறார். 

இதனை அடுத்து ஜெய் தற்போது நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஜருகண்டி' என்று பெயர் வைத்து இந்த படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் தலைப்பை பற்றி இயக்குனர் கூறும்போது " ஜருகண்டி என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு வார்த்தை. அப்படியென்றால் முன் செல்லு என்று அர்த்தம். படத்தின் தலைப்புக்கேற்ப படம் வேகமாக இருக்கும். அதனால் தான் இந்த பெயரை வைத்துள்ளோம். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. " என்று தெரிவித்துள்ளார். 

'ஜருகண்டி' நடிகர் ஜெய்யின் புதுப்பட தலைப்பு