Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் ஜெயம் ரவி தலைமையில் 'ஏமாளி' படத்தின் டீசர் இன்று வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி தலைமையில் 'ஏமாளி' படத்தின் டீசர் இன்று வெளியீடு

ஜெயமோகன் கைவண்ணத்தில் வி.சட்.துரை இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஏமாளி'. இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் ஸ்டைல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி சமூக ஆர்வம் மிக்கவர் இவர் நடிக்கும் படமும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து அனைவரையும் உயில் கொள்ள செய்வார்.

ஆனால் இந்த படத்தின் போஸ்டரை பார்த்து அவர் முற்றிலும் மாறுபட்டு நடித்திருப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லதா ப்ரொடக்சன் தயாரிப்பில் சாம்.டி.ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நான்கு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருப்பார் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தலைமையில் 'ஏமாளி' படத்தின் டீசர் இன்று வெளியீடு