Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவாவின் ஜிப்ஸி

actor jiiva new movie titled as gypsy

குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டிலை நள்ளிரவு 12:01AM மணிக்கு அறிவிக்கப்போவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது ஜீவாவின் 33வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் 'ஜிப்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜூமுருகன் முழு கமர்சியல் படமாக இயக்க உள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் வந்தவாசியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான அம்பேத் குமார் தயாரிக்க உள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் அம்பேத் குமார் கூறுகையில் "சிவகார்த்திகேயனின் 'மனம் கொத்தி பறவை', விமலின் 'தேசிங்கு ராஜா' போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் 'ஜிப்சி' படத்தை தயாரிக்க உள்ளது. நடிகர் ஜீவா நாயகனாக நடிக்க உள்ள இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தேசிய விருது பெற்று கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜு முருகன் முழு கமர்சியல் படமாக இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கு 'ஜிப்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவே ஆணிவேராகும்." என்று அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர், நடிகைகள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவாவின் ஜிப்ஸி