Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஏப்ரல் 26 இல் மோதும் மகேஷ் பாபு அல்லு அர்ஜுன்

actor mahesh babu allu arjun movies release on april 26th

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய நடிப்பில் இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கில் 'ஸ்பைடர்' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பரத் அனே நேனு'. இந்த படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக 'ஸ்ரீமந்துடு' படத்திற்கு பிறகு மகேஷ் பாபு, கொரட்டலா சிவா கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக கியரா அத்வானி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

டிவிவி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரித்து வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் 'நா பேரு சூர்யா' படமும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் மூலம் ஒரே நாளில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரது படங்கள் மோதவுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் முதன் முறையாக மிலிட்டரி கதாபத்திரத்தில் களமிறங்கியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை அணு எம்மனுயெல் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வக்கந்தம் வம்சி இயக்கி வருகிறார்.

பிரபல எழுத்தாளரான இவர் இயக்குனராக இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரது படங்களுக்கு எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது எதிர்பார்ப்பை சற்று பலமாகவே அதிகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 26 இல் மோதும் மகேஷ் பாபு அல்லு அர்ஜுன்