Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழில் ரீ என்ட்ரியாகும் மலையாள மெகா ஸ்டார்

mammootty re entry in tamil movie

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில்   நடித்ததோடு பல வெற்றி படங்களையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற திரையுலகில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். மம்மூட்டி முதல் முறையாக இயக்குனர் மது இயக்கத்தில் 1990ம் ஆண்டில் வெளிவந்த 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அழகன், தளபதி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் போன்ற பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.     

கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'வந்தே மாதரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு புது படத்தின் மூலம் மம்மூட்டி தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வரும் 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படத்தினை  'Play House Motion Picture' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்மூட்டி தயாரித்து நடித்து வருகிறார். முதல் முறையாக தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கும் இப்படத்தில் இவருடன் இணைந்து பிரித்வி ராஜன், பாண்டி, ஸ்ரீ ராம், பாண்டியராஜன்,மனோபாலா, ராஜேந்திரன் உள்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் குடியரசு தினத்தின் விடுமுறையை முன்னிட்டு வருகிற 26ம் தேதி வெளியிட உள்ளனர்.  

 இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீன் இயக்கி வருகிறார். இவர் சாகசம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருப்பது குறிப்பிட தக்கது. மேலும் ஷாம்தத் மலையாளம், தெலுங்கு, அரபிக், இங்கிலீஸ் போன்ற மொழிகளில் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்து வரும் இப்படத்தில் ஆதர்ஷ் ஆபிரஷாம் இசையமைப்பு பணியில் இணைந்துள்ளார். கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர், மலையாள டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு கிடைத்ததோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.     

தமிழில் ரீ என்ட்ரியாகும் மலையாள மெகா ஸ்டார்