Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான் பாறை

mansoor ali khan son acting kadamaan parai new movie

நடிகர் மன்சூர் அலிகான் 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலமானவர். அதற்கு பிறகு கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இதனை அடுத்து இவர் ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு 'கடமான் பாறை' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் நடிக்கிறார். கதாநாயகிகளாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கின்றனர். இந்த படத்தில் மன்சூர் அலிகான் காட்டில் வாழும் மனிதனாக நடிக்கிறார்.  

இந்த படத்தை பற்றி மன்சூர் அலிகான் கூறும்போது "காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, காட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் படத்தின் மைய கதை. காட்டுக்குள்ளே மாட்டிக்கொண்ட இளைஞர்கள் எப்படி சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே திரைக்கதை. படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெறுகிறது. இதுவரை யாரும் படமாக்கப்படாத இடங்களை தேடி படமாக்கியுள்ளோம். மேலும் முழுக்க கமர்சியல் காமெடி படமாக 'கடமான் பாறை' உருவாகியுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான் பாறை