Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் சேதுபதியின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள நானி

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் '96' படத்தை தெலுங்கில் டப் செய்வதாக இருந்த நிலையில் நடிகர் நானி இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அதில் நானே நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் '96'. இந்த படம் வரும் அக்டொபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி 'ராம்' என்ற கதாபாத்திரத்திலும், த்ரிஷா 'ஜானு' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளதாக நானி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தமிழ் அல்லது தெலுங்கில் வெளியாகும் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும். விஜய் சேதுபதியின் '96' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்யும் பணிகள் தயாராக இருந்தது. ஆனால் இந்த படத்தினை டப்பிங் செய்யாமல் தெலுங்கில் ரீமேக் செய்து அதில் நானே நடிக்கிறேன் என்றும் நடிகர் நானி தெரிவித்துள்ளார். நடிகர் நானிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது.

ராஜமௌலியின் 'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நானி நடிப்பில் இறுதியாக கடந்த 2014இல் 'ஆஹா கல்யாணம்' என்ற படம் வெளியானது. ஆனாலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் விஜய் சேதுபதியின் '96' படத்தை ரீமேக் செய்து நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதியின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள நானி