Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் நானி கார் விபத்தில் படுகாயம்

actor nani car accident in jubilee hills road

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நானி, தமிழ் தெலுங்கு மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் எண் 45 சாலையில் பயணித்து கொண்டிருந்து போது திடீரென அவருடைய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த நடிகர் நானி மற்றும் அவரது ட்ரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். நானி மற்றும் ட்ரைவர் இருவரும் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான நானி ரசிகர்கள் சோகத்தில் மூழ்க மறுபுறம் அவரை பற்றி அடுத்த சில மணி நேரங்களில் பல வதந்திகள் பரவியது. இதனை அடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  அவர் தனது டிவிட்டரில் "நான் நலமாக இருக்கிறேன். தற்போது அங்கும் இங்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கி விடுவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகர் நானி, தெலுங்கில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'அஸ்தா சம்மா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனை தொடர்ந்து ரைட், ஸ்னேஹிட்டுடா, பில்லா ஜமீன்தார் போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

இருந்தாலும் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 2012-ஆம் ஆண்டு வெளியான 'நான் ஈ' திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் 'ஈகா' என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு டொரொன்டோ ஆப்டர் டார்க் சிறந்த நடிகரான விருது இவருக்கு கிடைத்தது. இவருடைய தயாரிப்பில் 'அவ்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் இணைந்துள்ளனர். மேலும் இவருடைய நடிப்பில் 'கிருஷ்ணார்ஜுனா யுதம்' உருவாகி வருகிறது. தனது சிகிச்சைக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் நடிக்க போவதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

நடிகர் நானி கார் விபத்தில் படுகாயம்