Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஹாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் நெப்போலியன்

nepoleon hollywood movie

நடிகர் நெப்போலியன் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ் திரையுலகில் 1991-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இதனை அடுத்து தற்போது வரை கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

இவர் தற்போது முதல்முறையாக ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார். சாமலோகன் இயக்கும் இந்த படத்தை அமெரிக்க தொழிலதிபர் டெல் கணேசன் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு 'டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் தி நைன் ரூஜ் (Devil's Night: Dawn of the Nain Rogue)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமிழ் பின்னணி பாடகரான தேவன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஹாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் நெப்போலியன்