Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'சார்லி சாப்ளின் 2' படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய பிரபு

prabhu birthday celebration

நடிகர் பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான படம் 'சார்லி சாப்ளின்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் பிரபு இணையும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, தன்யா மற்றும் அடா சர்மா ஆகியோர் நடிக்கின்றனர். சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைப்பு பணியில் ஈடுபடுகிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது. நடிகர் பிரபுவின் பிறந்த நாளான நேற்று (டிசம்பர் 25) படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபுவின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

'சார்லி சாப்ளின் 2' படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய பிரபு