Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் ராம் சரணின் புதுபட பூஜை

ram charan new movie shooting begins

தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'ரங்கஸ்தலம்'. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் 1985-களில் நடக்கும் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டு வருகிறது. கோதாவரி ஆற்றுப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மிக பெரிய அளவில் இந்த படத்திற்காக கிராமத்து பாணியில் படப்பிடிப்பு செட் அமைத்து படமாக்கபட்டு வருகிறது.  

இந்த படம் சமந்தாவின் திருமணத்தால் படப்பிடிப்பில் இடைவெளி உருவானது. தற்போது நடிகர் ராம்சரண் அவருடைய தந்தையான சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை தயாரித்து வருகிறார். இதனால் 'ரங்கஸ்தலம்' படப்பிடிப்பிற்கு மீண்டும் இடைவெளி உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ராம்சரணின் அடுத்த படத்தின் பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் ராம்சரணின் 12 வது படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை டிவிவி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக நடிகை கீரா ஆலியா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் விவேக் ஓப்ராய் இணைந்துள்ளார். மேலும் பிரசாந்த், சினேகா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ராம் சரணின் புதுபட பூஜை