Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு

தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ள புது படத்திற்கு டைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சலீம், தர்மதுரை, அட்டு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தற்போது நாயகனாக பில்லா பாண்டி, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தாரை தப்பட்டை, மருது போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார்.

வில்லனாக இருந்து நாயகனாக தற்போது வலம் வரும் ஆர்கே சுரேஷ் தற்போது 'அட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் வெளியான 'அட்டு' படத்தை இயக்கியவர். தற்போது ஆர்கே சுரேஷ், ரத்தன் லிங்கா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு 'டைசன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேசுடன் 'அஃது' படத்தின் கதாநாயகன் அஜய் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை ஆர்கே சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் தயாரித்து நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'நெப்போலியன்' படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் ஜோடியாக வரலட்சுமி நடிக்க உள்ளார். 'தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு