Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள உள்ளே வெளியே 2 படத்தில் இணைந்த சமுத்திரக்கனி

Director Samuthirakani Acting Lead Role in Actor Director Parthiban Ulle Veliye 2 Movie, Image Credit - Facebook (@DirectorSamuthirakani)

நடிகர் பார்த்திபன் நடிப்பு, எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான படம் 'உள்ளே வெளியே'. இந்த படத்தில் ஊழலை எதிர்க்கும் காவல் அதிகாரியாக பார்த்திபன் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது காலா, கொளஞ்சி, ஆண் தேவதை, பேரன்பு  போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இவருடைய இயக்கத்தில் நாடோடிகள் 2, கிட்னா போன்ற படங்களின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் பார்த்திபனுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், ஆடுகளம் கிசோர், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

இது மட்டுமின்றி நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் பார்த்திபன் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாக உள்ள 'உள்ளே வெளியே 2' படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவான பிறகு இந்த படத்தின் பணிகளை துவங்கவுள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள உள்ளே வெளியே 2 படத்தில் இணைந்த சமுத்திரக்கனி