Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்

நடிகர் சிபிராஜ் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ரங்கா படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ரங்கா. இந்த படம் ஒரு காதல் மற்றும் திரில்லர்  கலந்த ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இந்த படத்தின் புதுமுக இயக்குனர் வினோத் . கடந்த ஆண்டு 2017லேயே சிபிக்கு  கதையைச் சொல்லி கால்ஷீட் பெற்றுவிட்டாராம் டைரக்டர் வினோத். 

இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார் , இதற்கு முன் பல திரைப்படங்களில் கிராமிய பெண்ணாக நடித்த இவர் இந்த படத்தில் நகரத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.ரங்கா என்னும் இந்த படத்தின் பெயர் ஏற்கனவே 80களில் ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம்  பாஸ் மூவிஸ் நிறுவனத்தினர் மறு உரிமம் பெற்றுள்ளனர். காஷ்மீரில் இந்த படம் 20 நாட்கள் படமாக்க பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த திரைப்படத்தை தயாரிப்பவர்கள் பாஸ் மூவிஸ்  நிறுவனம். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை எடிட்டர் ரூபன் மேற்கொள்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்வி மற்றும் இசை அமைப்பாளராக ராம் ஜீவனும் பணியாற்றியுள்ளனர். 

இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் ஒரு வகையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் சாயலை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். 

நடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்