Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ், சந்தானம்

sakka podu podu raja movie audio launch

இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்த படத்தை விடிவி ப்ரொடக்சன் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக முதன் முறையாக நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம், வைபவி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 22-இல் வெளிவர உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிம்பு, தனுஷ், சந்தானம், யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில் நடிகர் சிம்பு பேசும்போது "நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்டதற்காக தான் இந்த படத்தில் இசையமைப்பாளராக செயல்பட்டுள்ளேன். நண்பன் சந்தானம் வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். நான் நடித்த 'AAA' படம் வெற்றி அடையவில்லை என்றால் பரவாயில்லை என்னுடைய ரசிகர்களுக்கு ஜாலியா நடித்த படம் தான் அது. இதனால் நான் எந்த வருத்தமும் அடையவில்லை. அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன். ஒரே படமாக எடுக்க வேண்டிய படம் ஆனால் கொஞ்சம் செலவானதால் இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்தேன்.

படத்திற்கு அதிக செலவாகியதால் தயாரிப்பாளர் என்மீது மன வருத்தத்தில் இருந்தார். என்மீது தவறு இருந்தால் படப்பிடிப்பின் போதோ, ரிலீஸ் ஆன ஒரு மாதத்திலோ சொல்லியிருக்கலாம். ஆனால் ரிலீஸ் ஆன ஆறு மாதத்தில் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இப்போதும் நான் இயக்குனர் மணிரத்னம் படத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். என்மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை என்றே தெரியவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக நான் உடம்பை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது சற்று கடினமாக உள்ளது. விரைவில் நல்லது நடக்கும்" என்று தெரிவித்தார்." 

இதனை அடுத்து நடிகர் தனுஷ் பேசும்போது "நானும் சிம்புவும் 15 வருட நண்பர்களாக இருக்கிறோம். நடிகர் சிம்பு அழைப்பு விடுததாலேயே இந்த விழாவிற்கு கலந்து கொண்டேன். என்னுடைய வருகைக்கு சிம்பு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். என்னுடைய ரசிகர்களும் அவருக்கு நிச்சயம் இதுபோன்ற வரவேற்ப்பை அளிப்பார்கள். அவருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. நடுவில் இருப்பவர்கள் தான் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதுவரை நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம். நடிகர்கள் அனைவருமே ரசிகர்களுக்காக மட்டும் படம் நடிப்பதில்லை. அனைவரும் பார்க்க வேண்டும் என்று தான் படம் நடிக்கிறார்கள். சிம்பு ஆண்டிற்கு இரண்டு படங்களையாவது நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சார்பில் நான் கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சந்தானம், தனுஷ் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று அவரை புகழ்ந்து பேசினார். அப்போது  குறுக்கிட்டு பேசிய தனுஷ் "அது ஒரு வேறு மொழி படம் அவ்வளவுதான் மற்றபடி வேறொன்றும் இல்லை. தொழிலை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்ற மொழியில் நான் நடிக்கும் படம் தான் அது." என்றார்.

சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ், சந்தானம்