Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிவகார்த்திகேயனின் புது பட தகவல்

sivakarthikeyan new movie updates

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள வேலைக்காரன் படத்தினை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி சுற்றியுள்ள பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். நாயகியாக சமந்தா நடித்து வரும் இப்படத்தில் சிம்ரன், சூரி முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.  

இதனை தொடர்ந்து சிவாவின் அடுத்த பட தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில வருடத்திற்கு முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த 'இன்று நேற்று நாளை' படத்தினை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை இயக்குவதாக செய்திகள் கசிந்துள்ளது. மேலும்  இப்படத்தினை 24AM Studio சார்பில் ஆர்டி.ராஜா தயாரிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக விரைவில் படக்குழு செய்திகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

சிவகார்த்திகேயனின் புது பட தகவல்