Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா

sj surya new movie with oru naal koothu director

நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குனராக இருந்து நடிப்பில் களமிறங்கியவர். இவர் கதாநாயகனாக நடித்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்', 'மெர்சல்' போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படங்களில் இவருடைய நடிப்பை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதன்மூலம் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

தற்போது மீண்டும் கதாநாயகனாக 'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வும் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. விரைவில் இந்த படத்தில் இணையும் பிரபலங்கள் பற்றிய தகவல் விரைவில் படக்குழு வெளியிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா