Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்த சூர்யா

suriya and his son at kadaikutty singam shooting spot

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யாவின் 35 வது படமாக 'தானா சேர்ந்த கூட்டம் வெளியாகியுள்ளது'. இதனை அடுத்து இவருடைய 36வது படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரிப்பில் அவருடைய தம்பி நடிகர் கார்த்தி நடிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ரேக்ளா ரேஸ் பந்தயத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த காட்சியை காண நடிகர் சூர்யா தனது மகனுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டார். விவசாயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் சாயிஷா ஆகியோர் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ராகுல் ரீத் சிங் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் நடிகர் சத்யராஜ், காமெடி நடிகர் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூரி படப்பிடிப்பின் போது பாட்டிகளுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது இந்த படத்திற்கு இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்த சூர்யா