Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜெய்யின் ஜருகண்டி படத்திற்கு கை கொடுத்த சூர்யா

actor suriya release jarugandi movie teaser tomorrow

நடிகர் ஜெயின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் 'பலூன்'. இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள படம் 'கலகலப்பு 2'. வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் ஜெய்யுடன் ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரினா தெரசா உள்ளிட்டோர் கலகலப்பாக கலக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து   இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஜருகண்டி'.

இந்த படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இந்த படத்தை நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகின்றனர். முன்னதாக 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசரை பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் இணைந்துள்ளார். இவர்களுடன் ரோபோ சங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு போபோ சஷி இசையமைத்துள்ளார்.  

ஜெய்யின் ஜருகண்டி படத்திற்கு கை கொடுத்த சூர்யா