Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா

விசுவாசம் படத்தின் கதையை தொடர்ந்து விசுவாசம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வந்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விசுவாசம் படம் கிராம பின்னணியில் வீரம் படத்தை போன்று தயாராகி வருகிறது. தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு படத்தின் ஓப்பனிங் பாடலுடன் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் கதையும், இந்த படத்தின் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் கதையை தொடர்ந்து தற்போது நடிகர் தம்பி ராமையா கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தம்பி ராமையா வீரம், வேதாளம் படங்களுக்கு பிறகு இந்த படத்திலும் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்துடன் இணைந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படத்தில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.

இந்த படத்தில் இவர் அஜித்துடன் இணைந்து படம் முழுக்க பயணிக்கும் விதமாக அஜித்தின் தாய் மாமன் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தவிர இந்த படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு,  ஜாங்கிரி மதுமிதா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, கலைராணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறது. வரும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களுக்கு தல தீபாவளியாக இந்த படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு மும்முரமாக படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

விசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா