பெரியாரின் சிலை உடைப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
விக்னேஷ் (Author) Published Date : Mar 20, 2018 16:58 ISTபொழுதுபோக்கு
புதுக்கோட்டையில், ஆலங்குடி அருகே பெரியார் சிலை மர்ம நபர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2013-ஆம் ஆண்டில் திராவிட கழக தலைவர் வீரமணி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பெரியாரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பராமரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெரியாரின் சிலையை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து பொதுமக்கள் ஆலங்குடி காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு உடைந்த பெரியாரின் தலையை ஓட்ட வைத்தனர் இருப்பினும் வன்முறையை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இமயமலை சென்று திரும்பிய ரஜினிகாந்த், பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டி தனமானது என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு ரத எதிர்த்து போராடிய ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
அப்போது பெரியாரின் சிலை உடைப்பை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் "காட்டுமிராண்டிகளை தண்டிக்கும் வரை திமுக ஓயாது . பெரியாரின் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவை. சிலைகளை சிதைத்து பெரியார் மண் என்ற பெருமையை யாரும் சிதறடிக்க முடியாது. திமுக தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் "பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! ..உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்!" என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.