Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்

actor vemal new movies 2018 after mannar vagaiyara movie

கில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விமல் நாயகனாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகிற்கு எண்ட்ரீ ஆனார். இதன் பிறகு வெளிவந்த களவாணி,  தூங்கா வனம், வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிவந்த படம் 'மன்னர் வகையறா'. இந்த படம் வெற்றியடைந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆக்சன் கலந்த குடும்ப படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விமல் அறிமுக இயக்குனரான முத்துக்குமரன் இயக்கத்தில் 'கன்னி ராசி' படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக வரலட்சுமி இணைந்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். மேலும் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2' படத்திலும் பிசியாக உள்ளார். இந்த படத்திலும் நடிகை ஓவியா விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது விமல் மேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன் படி சசிகுமார் நடிப்பில் வெளியான 'வெற்றிவேல்' படத்தின் இயக்குனர் வசந்த மணி இயக்கத்திலும், இயக்குனர் ஏஆர் முருகதாசின் உதவி இயக்குனரான அசோக் இயக்கத்திலும், குறும்பட இயக்குனர் விஜய் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே தற்போது நடிகர் விமல் கைவசம் 5  படங்களை வைத்துள்ளார். 

அடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்