Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜங்கிலீ படப்பிடிப்பில் காயமடைந்த வித்யூத் ஜம்வால்

vidyut jammwal injured on junglee movie

ஹிந்தி நடிகரான வித்யூத் ஜம்வால், தமிழில் விஜயுடன் 'துப்பாக்கி', அஜித்துடன் 'பில்லா 2', சூர்யாவுடன் நண்பனாக 'அஞ்சான்' போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகிற்கு பிரபலமானார். இவர் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் 'ஜங்கிலீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். சிறந்த ஆக்சன் நடிகரான இவர் தனது மூன்று வயதிலிருந்தே தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார். இவரது படங்களில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.

இந்நிலையில் இவர் தற்போது நடித்துவரும் 'ஜங்கிலீ' படத்தின் படப்பிடிப்பின் போது ஜன்னல் வழியாக குதிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு உடலில் கயிறு கட்டி பாதுகாப்பாக குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்பாராத விதமாக குதிக்கும் போது அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. படுகாயம் அடைந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் 'ஜங்கிலீ' படம் டோனி ஜாவின் 'டாம்-யம்-கூங்' படத்தை போன்ற அதிரடியாக உருவாகி வருகிறது.  இந்த படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் சக் ரசல் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஜங்கிலீ பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் உஸ்மா கான், விக்கி விஜய்ம், யோகேந்திர மெக்ரே ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சமீர் உத்தின் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

ஜங்கிலீ படப்பிடிப்பில் காயமடைந்த வித்யூத் ஜம்வால்