Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 100வது படத்தில் விஜய்

vijay acting in super good films 100th movie

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் தற்போது வரை 80 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. இந்த படங்களை தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி தனது சொந்த நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இவருடை மகன்கள். 1988-ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம், 1990-ஆம் ஆண்டு  நடிகர் முரளி, ஆனந்த் பாபு நடிப்பில் வெளிவந்த 'புது வசந்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது. இந்த படத்திற்கு அவ்வாண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு மற்றும் பிலிம் பேர் விருதுகள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சேரன் பாண்டியன், கோகுலம், நாட்டாமை, சூர்ய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஆனந்தம் போன்ற படங்களுக்கு சிறந்த படத்திற்கான பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு மொட்ட சிவா கேட்ட சிவா, கடம்பன் போன்ற படங்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது தனது 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்க உள்ளார். இது குறித்து நடிகர் விஜயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை நடிகர் ஜீவா சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்கள் முன்னதாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த தீபாவளி அன்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படமான 'மெர்சல்' படம் வெளியானது. தற்போது நடிகர் விஜய், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 100 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 100வது படத்தில் விஜய்