Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மாணவி அனிதாவின் நினைவாக கல்வி வளர்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி

மாணவி அனிதாவின் நினைவாக கல்வி வளர்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு தனியார் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அவர் "நான் அதிகமாக எந்த விளம்பரத்திலும் நடிப்பதில்லை. தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரத்தின் மூலம் எனக்கு கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக வழங்கவுள்ளேன். கல்வி வளர்ச்சியில் அரியலூர் மாவட்டம் மிகவும் பின்தங்கி உள்ளது. 

இதன் மூலம் அங்குள்ள மொத்தம் 774 பள்ளிகளுக்கு தலா 5000 ருபாய் வீதம் 38,70,000 ரூபாயும், 11 செவித்திறன் பள்ளிகளுக்கு ரூபாய் 50,000 வீதம் 5,50,000 ரூபாயும், 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு 5000 ரூபாய் வீதம் 5 லட்சத்தையும், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஹெலன்ஹெல்லர் என்ற செவித்திறன் குறைந்த பள்ளிகளுக்கு ரூபாய் 50,000 என மொத்தமாக 49,70,000 ரூபாயை தமிழக அரசிடம் வழங்க இருக்கிறேன். மேலும் டாக்டராக ஆசைப்பட்டு அது முடியாமல் உயிரழிந்த மாணவி அனிதாவின் நினைவாக இந்த நிதியுதவியை வழங்குகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாணவி அனிதாவின் நினைவாக கல்வி வளர்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி