Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி பிட்சா, இறைவா, ஜிகர்தண்டா படங்களில் நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் புது படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. நாளை இந்த படத்தின் 'காலா' படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் இறுதி கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முன்னதாக பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, இறைவி போன்ற படங்களில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் சித்தார்த் நாயகனாக நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்திலும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்த படத்திலும் நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி