Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

போராட்டம் நடக்கும் நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பை எதிர்த்த ஜே சதிஷ் குமார்

இவர்களுக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி அளித்தனர், இந்த அனுமதியை நான் மிகவும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்க போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான திரு விஷால் அவர்கள் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நடக்கும் போராட்டத்தை பற்றிய விசியங்களை ஆலோசித்து குறிப்பிடதக்கது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் யாரும் திரை படம் இயக்குவதோ அல்லது திரை துறை சார்ந்த எந்த வேளையிலும் ஈடுபட கூடாது என்று கேட்டு கொண்டனர்.

இந்நிலையில் திரு ஜே சதிஷ் குமார் அவர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார், அதில் நடிகர் விஜய் அவர்களின் புதிய திரை படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் நடைபெற்று கொண்டிருப்பதாக பதிவிட்டார். மேலும் தமிழ் திரை துறையில் ஒற்றுமை எங்கே ? யாரையும் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று அறிவித்த நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி அளித்தனர், இந்த அனுமதியை நான் மிகவும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடக்கும் நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பை எதிர்த்த ஜே சதிஷ் குமார்