Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்

vijay wishes to sibiraj

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிப்பில் டிசம்பர் 8-இல் வெளியான படம் 'சத்யா'. இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அருணமணி பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிபிராஜ், ரம்யா, வரலட்சுமி, ஆத்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நாதாம்பாள் பிலிம்ஸ் பேக்டரி சார்பில் மகேஸ்வரி சத்யராஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-இல் வெளியான 'க்ஷணம்' படத்தின் ரீமேக்காக இந்த படம் தமிழில் வெளியாகியுள்ளது. 

தற்போது அனைத்து திரையரங்குகளிலும் நிறைந்த காட்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் போன்ற ஏராளமானோர் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'சத்யா' படத்தை பார்த்த நடிகர் விஜய், சிபிராஜை வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை சிபிராஜ், தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஒரு ரசிகனாக பெருமை படுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நடிகர் சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்