Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

kamal haasan vikram joines new movie chiyaan 56 officially announced

நடிகர் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2', 'இந்தியன் 2' படத்தில் பிசியாக உள்ளார். மறுபுறம் பிப்ரவரி 21-இல் தனது கட்சியின் பெயரை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளில் தற்போது பிசியாக ஈடுபட்டு வருகிறார். இதில் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படத்தின் சவுண்ட் டிராக்குக்காக சமீபத்தில் அமெரிக்க சென்று சவுண்ட் டிராக் சிறப்பானதாக வந்துள்ளது என்று தெரிவித்தார். இதனை அடுத்து இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள 'இந்தியன் 2' பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கலை இயக்குனராக டி முத்துராஜும், கான்சப்ட் வடிவமைப்பாளராக பாகுபலி, 2.0 படத்தில் பணியாற்றியுள்ள விஸ்வநாத் சுந்தரம் என்பவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சீயான் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது டிவிட்டரில் " திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா  மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும்  நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்." என்று தெரிவித்துள்ளார்.  தற்பொழுது சீயான் விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' படம் வெளியானது.

இதனை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கமல் ஹாசன் மற்றும் விக்ரம் முதன் முறையாக இணையும் இந்த படத்தை 'தூங்கா வனம்' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கவுள்ளார். விக்ரமின் 56 வது படமாக உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனலுடன் இணைந்து ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகை செல்வி, அக்ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு