ஸ்கெட்ச் படத்தின் டப்பிங்கில் குரலை மாற்றிய விக்ரம்
விக்னேஷ் (Author) Published Date : Nov 29, 2017 19:14 ISTபொழுதுபோக்கு
விக்ரம் ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் பணியில் கடந்த பத்து நாட்களாக ஈடுபட்டு வருகிறார். வட சென்னை தமிழ் மொழியில் டப்பிங் செய்யும் விக்ரம், சில காட்சிகளில் அவரது குரலை வித்தியாசப்படுத்தியும் பேசியிருப்பதாக படக்குழு கூறுகின்றனர். இதன் காரணத்தினால் மற்ற படங்களை ஒப்பிடும் போது ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் செய்வதற்கு விக்ரம் அதிகமான நாட்கள் எடுத்து கொண்டதாக கூறுகின்றனர்.
விஜய் சந்திரன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் 'ஸ்கெட்ச்' படம் உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். வட சென்னை கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூரி, ஸ்ரீ ப்ரியங்கா, ராதா ரவி, ஆர்கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளிவர இருப்பதால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணியில் படக்குழு இணைந்துள்ளது.
ஸ்கெட்ச் படத்தின் டப்பிங்கில் குரலை மாற்றிய விக்ரம்
  Tags :  actor vikram new style dubbing in sketch movie, actor vikram new film, sketch movie dubbing finished, chiyaan vikram, sketch movie dubbing finish actor vikram