பிரபல மலையாள இயக்குனர் இயக்கத்தில் சீயான் விக்ரம்
வேலுசாமி (Author) Published Date : Oct 29, 2018 17:58 ISTபொழுதுபோக்கு
சீயான் விக்ரம் நடிப்பில் 'சாமி ஸ்கொயர்' படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படம் 'DONT BREATHE' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இந்த படத்தினை கமல் ஹாசன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு 'மஹாவீர் கர்ணா' என்ற சரித்திர படத்தில் இயக்குனர் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக ஒரு மலையாள இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த விக்ரமின் அடுத்த படத்தினை பிரபல மலையாள இயக்குனரான அன்வர் ரஷீத் என்பவர் இயக்க உள்ளார். இவர் மலையாளத்தில் ராஜமாணிக்கம், சோட்டா தம்பி, உஸ்தாத் ஹோட்டல் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது டிரான்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை முடித்த பிறகு விக்ரமை இயக்க உள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் போன்ற இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளதாம்.