Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகை குஷ்பூ வெளியிட்ட சிம்புவின் பக்கு பக்கு லிரிக்கல் வீடியோ

kushboo release thodra movie bakku bakku lyrical video song sung by simbu

புதுமுக இயக்குனர் மதுராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'தொட்ரா'. இந்த படத்தை தயாரிப்பாளர் சந்திரா சரவணகுமார், கேஎஸ் அபூர்வா ப்ரொடக்சன் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் பாண்டியராஜன் மகன் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை வீணா நடித்துள்ளார். இந்த படத்தில் சரவணகுமார் வில்லனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் ஏ வெங்கடேஷ், கணேசன், கூல் சுரேஷ், மைனா சூசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு ஆர்ஏன் உத்தமராஜா இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் நடிகர் மற்றும் பாடகரான சிம்பு 'பக்கு பக்கு' என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ ஒன்றை நடிகை குஷ்பூ, சிம்புவின் பிறந்த நாளான இன்று வெளியிடுவதாக படக்குழு முன்னதாக தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் 'பக்கு பக்கு' என்று தொடங்கும் பாடல் வெளிவந்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் மதுராஜ் கூறும்போது "இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில் பணம் மற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகள் உறவுகளை இணைப்பதா, பிரிப்பதா என்பதை தீர்மானிக்கிறது. இதனால் காதலும், காதலர்களும் அங்கு சிதைக்கப்படுகிறார்கள். இது போன்ற விஷயத்தை தான் இந்த படத்தில் சமூக அக்கறையுடன் பேசியுள்ளேன். சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்பூ வெளியிட்ட சிம்புவின் பக்கு பக்கு லிரிக்கல் வீடியோ