Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கார்த்தியின் 17வது படத்தை மோகினி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, Image Credit - @PrincePictures_ (Twitter)

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திக் உடன் நடிகை சயீஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி, புதுமுக இயக்குனர் ராஜத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் கார்த்தியின் 17வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தை த்ரிஷாவின் 'மோகினி' படத்தை இயக்கிய பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்