Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா

ஐபிஎல் 11வது கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொள்கிறார்.

ஐபிஎல்லின் 11வது சீசன் கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை காண ரசிகர்களின் ஆர்வம் இந்த ஆண்டின் தொடக்கத்திலே கலை கட்டி வருகிறது. இதற்காக ரசிகர்கள் பலத்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு களமிறங்குகிறது.

இதனால் சென்னை முழுவதும் மஞ்சள் நிறமாகவே காணப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லின் முதல் ஆட்டமே, ஐபிஎல்லின் ஆர்வத்திற்கு காரணமான முக்கியமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இந்த முதல் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு 8 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை அணி மும்பையுடன் மோத உள்ளது.

இதனால் மும்பை அணி தனது சொந்த மண்ணில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லின் துவக்க விழாவும் வரும் 7 ஆம் தேதியே நடைபெற உள்ளது. கடந்த ஆண்டின் துவக்க விழாவில் டைகர் ஷராப், ஷ்ரத்தா கபூர், பரினீதி சோப்ரா, திஷா பட்டனி, எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டு ஐபிஎல்லை துவக்கி வைத்தனர்.

இதே போல் இந்த ஆண்டின் துவக்க விழாவில் வருண் தவான், ஜாக்லின் பெர்னாண்டஸ், ஹ்ரித்திக் ரோஷன், பரினீதி சோப்ரா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவும் இணைந்துள்ளார். நடிகை தமன்னா மும்பையை சேர்ந்தவர். இவர் இந்த பட்டியலில் இணைந்ததது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் நடிகர் ரன்வீர் சிங் இணைவதாக இருந்தது ஆனால் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த பட்டியலில் வெளியேற வேண்டியிருந்தது. 

இந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா