இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளராக திரிஷாவின் குற்றபயிற்சி
வேலுசாமி (Author) Published Date : Feb 01, 2018 10:19 ISTபொழுதுபோக்கு
தமிழில் முன்னணி நடிகையான திரிஷா நடிப்பில் தற்போது மோகினி, கர்ஜனை, 96, சதுரங்க வேட்டை 2, 1818 போன்ற படங்கள் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது முதுமுக இயக்குனர் வெர்னிக் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த படத்திற்கு 'குற்றப்பயிற்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகை த்ரிஷா தனது டிவிட்டரில் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த படம் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா முதல் முறையாக துப்பறிவாளர் கதாபத்திரத்தை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி விவேகானந்தன் தயாரிக்க உள்ளார். இந்த படம் 1980 கால கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தில் துப்பறிவாளராக நடிக்கும் திரிஷா கதாபாத்திரம் ரஜனி பண்டிட் அவர்களிடம் இருந்து உருவாக்கப்பட்டதாக இந்த படத்தின் இயக்குனர் வெர்னிக் தெரிவித்துள்ளார்.
ரஜனி பண்டிட் என்பவர் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது துப்பறியும் பணியை சிறு வயதில் இருந்து ஆரம்பித்து 1991-ஆம் ஆண்டு ரஜனி துப்பறியும் பணியகத்தை துவங்கியுள்ளார். தற்போது மும்பையில் தனது ரஜனி துப்பறியும் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் 30 கும் மேற்பட்ட துப்பறிவாளர்கள் பணி புரிகின்றனர். ஒரு மாதத்தில் 20 கும் மேற்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். நடிகை திரிஷா, ரஜனி பண்டிட் கதாபத்திரத்தில் நடிக்கும் இந்த படம் அவருடைய வாழ்க்கையில் முக்கிய படமாக பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.