அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்
வேலுசாமி (Author) Published Date : Feb 06, 2018 11:00 ISTபொழுதுபோக்கு
மலையாளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பல புதுமுகங்கள் நடிப்பில் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று நூறு நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்தை நடிகர் திலீப்பின் நண்பரான இயக்குனர் நாதிர்ஷா என்பவர் இயக்கியிருந்தார். தற்போது, இந்த படம் தமிழில் 'அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை' என்ற தலைப்பில் ரிமேக் செய்யப்பட உள்ளது.மலையாளத்தில் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தை இயக்கிய இயக்குனர் நாதிர்ஷா மீண்டும் தமிழில் இயக்க உள்ளார்.
விஜய் டிவியில் போன் போட்டு ஒருத்தரை விடாமல் கலாய்க்கும் கலக்க போவது யாரு தீனா என்பவர் இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. இந்த படத்தின் மூலம் தீனா நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
இதற்கு முன்னதாக சில குறும்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு வசனத்திற்கும் இந்த படம் வெற்றி அடையும் என்றும் சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் இவரும் திரையுலகில் சாதனை படைப்பார் என்று திரை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தனது வுணடர்ப்பார் நிறுவனம் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது தீனா மற்றும் அறந்தாங்கி நிசா ஆகியோர் திரையுலகில் களமிறங்க உள்ளனர்.