Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் விவேகம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படம் உருவாகி வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் நான்காவது முறையாக மீண்டும் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வீரம் படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து பின்னணியில் அஜித், இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக அசத்த உள்ளார். இந்த படத்தை எம் மகன், பாணா காத்தாடி, தொடரி, விவேகம் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

டி இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர், கோவை சரளா, தம்பி ராமையா, என்னை அறிந்தால் படத்தில் நடித்த சிறுமி அனிகா, விவேக், கலைராணி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தல தீபாவளியை ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு தல பொங்கலாக தெறிக்க உள்ளது.

தல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு