Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. இந்த படத்தில் அஜித் குமார் அண்ணன் தம்பியாக இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக வெளியான அஜித்தின் இரட்டை கதாபாத்திர படங்களான வாலி, வில்லன், அட்டகாசம், வரலாறு, அசல், பில்லா போன்ற படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்தை இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'வீரம்' படத்தை போன்று கிராமத்து பின்னணியில் அதிரடி ஆக்சனாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் பிறகு இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நாளை இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வெளியாகும் 'விசுவாசம்' படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்துடன் உள்ளனர். தற்போது 'விசுவாசம்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. நாளை வெளியாகவுள்ள 'விசுவாசம்' படத்தின் அடுத்த அப்டேட் படத்தின்  சிங்கிள் டிராக் அல்லது இசை வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. எந்த அப்டேட்டாக இருந்தால்  என்ன, அப்டேட் வந்தால் போதும்.

நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்