Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உறுதியானது தல 59 பிங்க் படத்தின் ரீமேக் தான்

உறுதியானது தல 59 பிங்க் படத்தின் ரீமேக் தான்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'விசுவாசம்'. வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் டி இமானின் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில் இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று நீண்ட காலமாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியில் 2016இல் அமிதாப்பச்சனின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த படம் 'பிங்க்'.

இந்த படத்தில் அமிதாப்பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில் அதாவது வழக்கறிஞராக 'தல 59' படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு சமூக கருத்து கொண்ட படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது விசுவாசம் படத்தில் அஜித் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.

உறுதியானது தல 59 பிங்க் படத்தின் ரீமேக் தான்