Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துக்கு சண்டை பயிற்சி அளிக்கும் திலீப் சுப்பராயன்

மீண்டும் அஜித் படத்தில் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பிரபல சண்டை பயிற்சியாளரான திலீப் சுப்பராயன், காலா படத்திற்கு பிறகு வட சென்னை, குப்பத்து ராஜா, தமிழ் படம் 2.0, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விசுவாசம் படத்திற்கும் சண்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அஜித் படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முதல்கட்டதை நிறைவு செய்து இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித் டூப் ஏதும் போடாமல் ரியலாகவே சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம். இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருதில் திலீப் சுப்பராயனுக்கு தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரசிகர்களுக்கு தல தீபாவளியாக அமைய உள்ளது.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துக்கு சண்டை பயிற்சி அளிக்கும் திலீப் சுப்பராயன்