Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி தகவல் - நடிகர் ஆரி

actor aari speech about thala ajith

நடிகர் ஆரி 'விசிறி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி தகவலை தெவித்துள்ளார். இசை வெளியீட்டில் ஆரி பேசிய போது விரைவில் அஜித் அரசியலுக்கு வருவார் என்று கூறினார். 

மகாலிங்கம் இயக்கி வரும் 'விசிறி' படத்தில் ராஜ் சூர்யா, ராம் சரவணா, ரிமோனா ஸ்டெப்னி போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (22.11.17) இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி,ஸ்.ஏ.சந்திரசேகர், தமிழக பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார், பாடலாசிரியர் மதன்கார்க்கி போன்றவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ஆரி சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். தளபதி பற்றி அனைத்து விவரங்களும் தெரியும், தல அஜித்தை இன்னும் அரசியல் பட்டியலில் சேர்க்கவில்லை, அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு பெரிய வரைபடத்தை வரைந்து வைத்திருப்பதாக அஜித்தின் நெருங்கிய வட்டத்தில் ஒருவர் வெளிப்படுத்தி இருப்பதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தல அரசியலுக்கு வருவதாக தெரிகிறது.    

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி தகவல் - நடிகர் ஆரி