Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பழங்குடியினர் ஓநாய்களை எப்படி வேட்டையாட பயன்படுத்தினர் என்பதை எடுத்துரைக்கும் ஆல்பா

கடந்த ஆகஸ்ட் 17இல் உலகம் முழுவதும் வெளியான 'ஆல்பா' தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் வசூலையும் பெற்று வருகிறது.

கொலம்பியா பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 17இல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் 'ஆல்பா (ALPHA)'. இயக்குனர் ஆல்பர்ட் ஹக்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம், பழங்குடியினருக்கு ஓநாய்கள் வேட்டையாடுவதற்கு எப்படி உதவியாக இருந்தது என்பதை 20,000 வருடங்கள் முன்னோக்கி சென்று மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாக வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் தமிழிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்த படம் 20000ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இந்த படத்தில் பழங்குகுடியின தலைவர் தனது கூட்டத்துடன், தனது இனத்தை காப்பாற்ற வேட்டைக்கு புறப்படுகிறார். இந்த வேட்டையில் முதன் முறையாக பழங்குகுடியின தலைவர், அவருடைய மகனான கெடா என்ற இளைஞரையும் அழைத்து செல்கிறார். காடு மலைகளை தாண்டி தங்கள் முன்னோர்கள் காட்டிய பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை தாண்டி பயணிக்கின்றனர். இந்த பயணத்தில் இருட்டில் அனைவரும் பேசி கொண்டிருக்கும் போது கெடாவின் நண்பனை சிறுத்தை கொன்று விடுகிறது.

இதனால் அந்த இளைஞனுக்கு பயமும், இரக்க குணமும் அதிகமாகிறது. ஒரு வழியாக நீண்ட தூரம் பயணித்து காட்டெருமைகள் இருக்கும் இடத்தை அடைகின்றனர். பிறகு பதுங்கி காட்டெருமைகளை துரத்துகின்றனர். இந்த காட்டெருமைகள் மொத்தமாக ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இறந்து விடுகின்றன. ஆனால் ஒரு காட்டெருமை மட்டும் அந்த இளைஞனை நோக்கி வருகிறது. அந்த இளைஞன் அதனை கொள்ளாமல் பயந்து ஓடுகிறான். ஆனால் அந்த காட்டெருமை அந்த இளைஞனை முட்டி தூக்கி எரிகிறது.

இதனால் அந்த இளைஞனும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான். இவன் இறந்து விட்டதாக நினைத்து அவரது தந்தை அழுது, இறுதி சடங்கு செய்து விட்டு வேட்டையாடிய காட்டெருமைகளுடன் வீட்டை நோக்கி சென்று விடுகின்றனர். ஆனால் இறந்ததாக நினைத்த அந்த இளைஞன் சாகாமல் தனியாக அந்த இடத்தில் மாட்டி கொள்கிறான். என்ன செய்வதரியாமல் கதறுகிறான், பிறகு ஓநாய்கள் அவனை கொள்ள விரட்டுகின்றன, அவனும் ஓநாய்களுக்கு பயந்து மரத்தின் மீது ஏறுகிறான்.

அப்போது ஓநாய்களின் தலைவன் ஆல்பா, அவனை கடிக்கும் போது அதனை கத்தியால் குத்தி விட்டு மரத்தில் ஏறி தப்பித்து விடுகிறான். பிறகு காலை எழுந்து பார்க்கும் போது அவனும், அந்த ஆல்பா மட்டுமே இருக்கின்றன. பசியால் தவிக்கும் அவன், அதனை கொள்ள முயலும் போது அவனுடைய இரக்க குணம் அதை தடுக்கிறது. அடிபட்ட அந்த ஆல்பாவிற்கு உணவு தண்ணீர் கொடுத்து உதவுகிறான். உயிரை கொள்ளும் மிருகமாக இருந்த ஆல்பாவை தன்னுடைய இரக்க குணத்தால் சிறுக சிறுக மாற்றி நன்றியுள்ள பிராணியாக மாற்றி விடுகிறான்.

இதன் பிறகு தன்னுடைய வீட்டை நினைத்து, வீட்டிற்கு புறப்பட தயாராகிறான். புறப்படும் போது விசுவாசத்தால் ஆல்பாவும் அவனை பின்தொடர்கிறது. தனியாக தவிக்கும் அவனுக்கு, ஆறுதலாக இருந்த ஆல்பாவை தன்னுடன் அழைத்து செல்கிறான். நீண்ட தூரம் பயணிக்கும் அந்த இளைஞனுக்கு ஆறுதலாகவும், வேட்டையாடுவதற்கு எதுவாகவும் அந்த ஆல்பா உதவுகிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் அவனுடைய வீட்டை அடைய கடும் குளிரையும், கடும் பசியையும் சமாளித்து வீட்டை அடைய முயற்சி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆல்பாவால் முடியாமல் போக அதனை தூக்கி கொண்டே கடும் குளிரில் பயணித்து ஒரு வழியாக வீட்டை அடைகிறான். அவனை மீண்டும் பார்த்த அவனுடைய பெற்றோர்கள் வாயடைத்து போகின்றனர். அவனுடைய வீர தீர செயலும், ஆல்பாவின் நட்பும் கூட்டத்தினரை வாயடைக்க செய்கின்றது. இதனை அடுத்து ஆல்பா மூன்று குட்டிகளை ஈன்றெடுக்க படிப்படியாக வளர்ந்து, அதுவும் மனிதர்களுடன் குடும்பத்தில் ஒரு அங்கமாக பழகி அவர்களுக்கு வேட்டையாட உதவியாக மாறுகிறது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள், விலங்குகளுடன் மனிதர்கள் எப்படி சகஜமாக பழகினார்கள் என்பதையும் விலங்கினங்களின் இரக்க குணத்தையும் உணர்த்தியுள்ளது ஆல்பா.

பழங்குடியினர் ஓநாய்களை எப்படி வேட்டையாட பயன்படுத்தினர் என்பதை எடுத்துரைக்கும் ஆல்பா