கைது செய்யப்படுவாரா அமலா பால்?
புருசோத்தமன் (Author) Published Date : Oct 30, 2017 05:30 ISTபொழுதுபோக்கு
மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி,வேலையில்லா பட்டதாரி -2 போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகையாக விளங்குகிறார். மேலும் இவர் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் தற்போது நடித்து கொண்டிருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னையில் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் சொகுசு காரை ரூபாய் 1.12 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். திலாஸ்பேட் பகுதியில் உள்ள ரெர்சாஸ் தெரு என்ற முகவரியில் தங்கியிருப்பதாக புதுச்சேரியில் ஆகஸ்ட் -9ஆம் தேதி பதிவு செய்துள்ளார்.
இந்த காரை கொச்சியிலுள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்று உபயோகிப்படுத்தி வருகிறார்.கேரளாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்த காரை வைத்து ஊர் சுற்றி வருகிறார். இதனை அடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது அமலா பாலின் வாகனமும் சிக்கியது.
கேரளா விதிப்படி வாகனங்களை பயன்படுத்தினால் ஓராண்டுக்குள் அதை கேரளா எண்ணிற்கு மாற்ற வேண்டும். இதனால் அமலா பால் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலா பாலுக்கு 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை அடைவார் மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.